குரங்கணி–சாம்பலாறு தடத்தில் டிரக்கிங் செல்ல ஆர்வமில்லை: முன்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

1

தேனி மாவட்டத்தில் போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் குரங்கணி உள்ளது. 2018 ல் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 23 பேர் காட்டுத்தீயால் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனுமதியின்றி மலையேற்றம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக வனப்பகுதிகளை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கண்டுகளிக்கும் வகையில் ‘டிெரக் (Trek) தமிழ்நாடு’ என்ற திட்டம் 2024 ல் அறிமுக ப்படுத்தினர். இத்திட்டத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு மலையேற்ற வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 44 டிரக்கிங் பாதைகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் கட்டணம் செலுத்தி மலையேற்றம் மேற்கொள்ளலாம்.

44 பாதைகளில் குரங்கணி–சாம்பலாறு மலையேற்ற பாதையும் ஒன்றாகும். இந்த பாதையில் டிரக்கிங் துாரம் 5 கி.மீ., சுமார் 3 மணி நேர பணம் ஆகும். டிரக்கிங்கில் சாம்பலாறு, கொட்டக்குடி ஆறு, தடுப்பணை, சிறிய அருவிகள், பறவை, விலங்குகளை ரசிக்கலாம். கட்டணமாக 17 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ. 699, 6 முதல் 17 வயதிற்குட்பட்டோருக்கு ரூ.599 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பற்றி பலருக்கும் தெரியாதது, முந்தைய தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதையில் டிரக்கிங் செல்ல மலையேற்ற விரும்பிகள் ஆர்வம் காட்டவில்லை.

ஜூலையில் 9 பேர், ஆக.,ல் 16 பேர், செப்.,ல் 10 பேர் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 35 பேர் மட்டுமே மலையேற்றம் செய்துள்ளனர்.

டிரக் தமிழ்நாடு திட்டம் பற்றி வனத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் உள்ளூர் சுற்றுலா சார்ந்த வணிகம் பெருகும்.

வனத்துறையினர் கூறுகையில், குரங்கணி–சாம்பலாறு டிரக்கிங் பதிவு செய்தவர்களுடன் வனத்துறையினர், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் உடன் வருவார்கள். இந்த பாதையில் ஜூன் முதல் அக்.,வரை பசுமையான சூழலை அனுபவிக்கலாம். இவ்வாண்டு டிரக்கிங்கிற்கு போதிய வரவேற்பு இல்லை. மக்கள் மத்தியில் டிரக்கிங் ஆர்வத்தை அதிகரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர்.

கட்டணத்தை குறைக்க வேண்டும்





மலையேற்றம் செய்யும் போடி முருகவேல் கூறுகையில், 'குரங்கணி–சாம்பலாறு டிரக்கிங் பாதை இயற்கை அனுபவங்களை கொடுக்கிறது.

அரசு டிரக்கிங்கிற்கான கட்டணத்தை குறைத்தால் அதிக அளவிலான பொதுமக்கள், மலையேற்ற விரும்பிகள் ஆர்வம் காட்டுவார்கள்' என்றார்.

Advertisement