தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு

சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும், கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வரும் 2ம் தேதி காலை 10 மணிக்க, நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது.

மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி, அயலக அணி துணை செயலாளர் பரிதி இளம்சுருதி முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், தி.மு.க., நிர்வாக சீரமைப்பு தீர்மானத்தின் படி, நகர, பேரூர், ஒன்றிய சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதில், தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொ.மு.ச., நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

Advertisement