விதைகளின் முளைப்பு திறன் அறிந்து பயிரிட ஆலோசனை

திருவள்ளூர்: ‘விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து பயிரிட வேண்டும்’ என, வேளாண் அதிகாரி ராஜேஷ் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை மையத்தின், மூத்த வேளாண் அதிகாரி ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாயிகள், தங்களிடம் இருப்பு வைத்துள்ள விதை மற்றும் வயல்களில் இருந்து எடுக்கப்பட்ட விதை மாதிரிகளை, விதை பரிசோதனை நிலையத்தில், 80 ரூபாய் மட்டும் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அதன் வாயிலாக, விதைகளின் புறத்துாய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் ஆகியவற்றை, துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போது, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், ஐப்பசி பட்டத்தில் நெல், சோளம் மற்றும் காய்கறிகளை பயிரிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement