குட்கா விற்ற நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா பாக்கெட்டுகள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் நேவிஸ் அந்தோணி ரோசி மற்றும் போலீசார் நாயக்கன் தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், விழுப்புரம் நந்தனர் தெருவை சேர்ந்த சிவபாலன், 44; என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து சிவபாலனை கைது செய்து, 22 கிலோ 800 கிராம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்த அபிேஷக்,, 20; என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement