பார் சேல்ஸ்மேனை தாக்கிய வாலிபர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் பார் சேல்ஸ்மேனை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் ஆலடிரோடு தெருவை சேர்ந்தவர் சங்கர், 55. இவர் கடைவீதி முல்லாதோட்டம் பகுதியில் உள்ள தனியார் பாரில் சேல்ஸ்மேனாாக வேலை செய்து வருகிறார்.

இந்த பாருக்கு, முல்லா தோட்டத்தை சேர்ந்த சரவணன் மகன் வசந்தராஜ்,28; குமார் மகன் பிரவீன், செந்தில் மகன் அசோக் ஆகிய மூவரும் அடிக்கடி வந்து குடித்துவிட்டு கடன் சொல்வது வழக்கம். அதன்படி நேற்றும் கடனாக சரக்கு கேட்டனர். அதற்கு சங்கர், பழைய கடனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த வசந்தராஜ், பிரவீன், அசோக் ஆகிய மூவரும் சேர்ந்து சங்கரை ஆபாசமாக திட்டி தாக்கினர். மேலும், நாற்காலி, சரக்கு பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து வசந்தராஜை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

Advertisement