புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவகொழுந்து ஆலோசனை நடத்தினார்.

சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சமூக நலத்துறை அரசு செயலர் முகமது ஆஷன் அபித், இயக்குநர் ராகினி, அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சங்க கூட்டமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துதல், அரசு பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது. வீட்டு வசதி, போக்குவரத்து வசதிகள், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு தொடர்பாக உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து சங்க பிரதிநிதிகள் பேசினர்.

இந்த கோரிக்கைகளை பரிசீலினை செய்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.

Advertisement