உலக பார்வை தினத்தையொட்டி கண் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவ கல்வி நிறுவனத்தில், கண் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனத்தின், கண் மருத்துவத் துறை மற்றும் புதுச்சேரி தேசிய கண்பார்வையிழப்பு தடுப்புத் திட்டம் ஆகியன இணைந்து, 27வது உலக பார்வை தினத்தை முன்னிட்டு, ‘உங்கள் கண்களை நேசியுங்கள்’ என்ற கருப்பொருளில், கண் நல விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
கண் மருத்துவத் துறைத் தலைவர் தணிகாசலம் வரவேற்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் பிரதாப் வசிகர், குறைதீர்ப்பு அலுவலர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ், உலக பார்வை தினத்தை முன்னிட்டு செவிலியர் மற்றும் துணை மருத்துவ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் சுவரொட்டி உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவித்து, கண் நல விழிப்புணர்வை மேம்படுத்துவதில் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் பங்களிப்பை பாராட்டினார்.
டாக்டர் ஆரோக்கியம் ஜான் போஸ்கோ, முதியோருக்கான கண் பராமரிப்பு என்ற தலைப்பிலும், டாக்டர் செந்தமிழன் ரெனே ‘குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான கண் பராமரிப்பு’ என்ற தலைப்பிலும் பேசினர்.
டாக்டர் அர்ச்சனா சி, கண் நலம் தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார். டாக்டர் மலர்மொழி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!