இலவச பயிற்சி

மதுரை: பெட்கிராட், சுபம் அறக்கட்டளை சார்பில் மதுரை எஸ்.எஸ். காலனி பெட்கிராட் நிறுவனத்தில் இலவச மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சோய் மெழுகு, ஜெல், டிசைனர் மெழுகுவர்த்தி, பில்லர், டெகரேடிவ், புளோட்டிங், டேப்பர், டீ லைட், பிளவர் வகை மெழுகுவர்த்தி தயாரிப்பு, திரி தேர்வு, பிராண்டிங், பேக்கிங் குறித்து 26 நாட்களுக்கு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை கற்பிக்கப்படும். குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம். உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சான்றிதழ், எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், காட்டேஜ் சான்றிதழுடன் மானியத்துடன் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். முன்பதிவுக்கு: 98421 57155.

Advertisement