லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

தேனி: லஞ்சம்,ஊழல் தடுப்பு வார விழாவை முன்னிட்டு தேனியில் லஞ்ச ஒழிப்புத்துறை, அரிமா, தென்றல் லயன்ஸ் கிளப்கள் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஊர்காவல் படையினர் மாரத்தானில் பங்கேற்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., முத்துராஜ் மாரத்தானை துவங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி முன்னிலை வகித்தார். லஞ்சம், ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பங்களாமேட்டில் துவங்கிய மாரத்தான் ஓட்டம் நேருசிலை, என்.ஆர்.டி., நகர், பாரஸ்ட்ரோடு வழியாக மீண்டும் பங்களா மேட்டில் நிறைவடைந்தது. டி.எஸ்.பி., கூறுகையில்,‘ அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்களில் யாரும் தீபாவளி இனம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு 94981 05776 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்,’ என்றார்.

Advertisement