இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
ஆமதாபாத்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தியாவின் 'இரும்பு மனிதர்',சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். வலிமையான, வளமான தேசத்தை உருவாக்குவதற்காக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்தார். பாரத மாதாவிற்கு அவர் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட தியாகமும் அர்ப்பணிப்பும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பெரும் ஊக்கமூட்டும் சக்தியாகத் திகழ்கின்றன'' என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளை நாம் 'தேசிய ஒற்றுமை தினம்' என்று கொண்டாடுகிறோம். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் அனைத்துக் மக்களும் தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
துணை ஜனாதிபதி, சிபிஆர்; சர்தார் படேல் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய மகத்தான பங்களிப்பை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றப் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டும்.
@block_G@
காந்தியிடம் நெருங்கிய நட்பு
தமிழக கவர்னர் அர்லேக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: சர்தார் வல்லபாய் படேல் பர்தோலியில் விவசாயிகளின் நலன் காக்க ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் மக்களால் அன்புடன் சர்தார் (தலைவர்) என்று அழைக்கப்பட்டவர். தாம் வழக்கறிஞராக வாதாடிக் கொண்டிருந்த சமயத்தில் தன் மனைவி இறந்த தகவல் வந்தும், விசாரணை முடிந்து வழக்கு வெற்றி பெற்றபின் அனைவரிடமும் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றவர். சுதந்திர போராட்ட காலத்தில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட போது காந்தியிடம் நெருங்கிய நட்பு கொண்டார்.
விடுதலை பெற்ற பின்னர் தமக்கு காத்திருந்த பிரதமர் பதவியை காந்தியின் வேண்டுகோளின் படி நேருவிற்கு விட்டுக் கொடுத்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். சிதறிக்கிடந்த 565 சமஸ்தானங்களை மிகக் குறுகிய காலத்தில் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் கண்டவர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படுபவர். இந்திய நிர்வாகப் பணிகளை அறிமுகம் செய்தவர். நர்மதை நதியின் கரையில் உலகின் உயர்ந்த சிலையாக உருக்கொண்டிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த அக்டோபர் 31 அன்று போற்றி வணங்குவோம். இவ்வாறு அர்லேக்கர் கூறியுள்ளார்.block_G
நமக்கு கிடைத்த நல்ல தலைவர்களில் ஒருவர், நமது தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும்
யப்பா..சுதந்திரம் கெடைச்சு இத்தினி வருசத்துக்குப் பெறவு நவீன இந்தியாவை உருவாக்கின ஒரு அற்புதமான தலைவருக்கு உரிய அங்கீகாரம், மரியாதை கிடைச்சிருக்கு..ஒரு வழியா இந்த அக்டோபர் 2, நவம்பர் 14 தினங்களை தாண்டி சிந்திக்க ஆரம்பிச்சிட்டோம்..நல்ல காலந்தான்
SUPER SIR ARUMAYAANA MIGA PERIYA DESA THALAVAR PATEL.INGU ULLA TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. AVARGALUKKU SORIYAAN MATTUME ULAGA MAHA THALAIVAR.
நேரு காந்தியை கெஞ்சி தனக்கு பதவி கொடுக்க சொல்லி, படேல் அவர்கள் விட்டு கொடுத்தார்.
இன்று இந்திரா காந்தி நினைவு தினம் எத்தனை காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும்
அதையெல்லாம் ஞாபகப்படுத்த வேண்டாமே. மிசாவை மறக்கவே முடியாது.
இந்தியாவின் இரும்பு மனிதர்.... இவர் தான் இந்தியாவின் பிரதமாராக வந்து இருக்க வேண்டும்....
இன்றிருக்கும் நாட்டின் அவமான சின்னம் ராஹுல் அவரின் தவறான செயலால்தான்மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி