பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை
சென்னை: மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜூவை சேலம் கண்காணிப்பாளராக மாற்றி முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
அவரது அறிக்கை: தேனி மாவட்டச் சிறையில் அக்டோபர் 26ம் தேதி இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேனி மாவட்டச் சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின்படி மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும்.
* பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வீடியோ!
கவனக்குறைவாக இருந்தால்...! சிறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் வார்னிங்
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
@block_G@
தப்பியோட்டம்!
அன்னூர் போலீஸ் நிலைய வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ராகவன் (25) தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.block_G
மக்கள் பணத்தை கொள்ளை அடித்த, முன்னாள் அமைச்சர்கள் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இந்நாள் அமைச்சர்களுக்கு என்ன நடவடிக்கை?, முதல்வரே...
கவனக்குறைவா இருந்தா கடும் நடவடிக்கை ... இதை முதல்வர் சொல்லவேண்டிய தேவை இருப்பதே அவமானம் ..... என்ன ப்ரோ .... நல்லா பாருங்க, வேலை நேரத்துல ரீலிஸ் பார்த்திட்டு இருக்கப்போறாங்க ....
இன்றைய வடை சுட்டாச்சு.. ஆகட்டும் அனைவரும் சாப்பிடுங்க
ஆமா இல்லேன்னாலும் அப்படியே நடவடிக்கை எடுத்துருவாரு.
இனி யாரும் சிறையில் இருந்து தப்பிக்க முடியாது
தினம் தினம் கொலை கொள்ளை சாராயம் போதை பாலியல் குற்றம் என்று நாடு சீரழிந்தது .....கஞ்சா போதையில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் .....தினம் தினம் சிறுமிகள் மாயம்
தமிழக கோர்ட், சிறை, போலீஸ் நிலையம், சட்ட பேரவை.. மத்திய பாதுகாப்பு படை கீழ் கொண்டு வர வேண்டும். ஊழல் செய்யாத போது இது உதவும். தமிழகம் முழுவதும் 5 ம் படை முழு நேர பணியில் உள்ளது
சிறை துறையில் உள்ள லஞ்ச ஊழலை களையெடுக்காமல் எந்த மாற்றமும் வராது ...லஞ்ச ஊழலை ஒழிக்க முயன்ற டி.ஜி.பி., சிறை கைதிகள் தப்பிவிட்டார்கள் என்று காரணம் காட்டி லாட்டரி ஆட்சி அவரை இடம் மாற்றியது ....இந்த துறையில் உள்ள லஞ்ச ஊழல் ஆசாமிகள் டி.ஜி.பி. மேல் பழி சுமத்த அவர்களே திட்டம் போட்டு கைதிகளை தப்ப விட்டார்கள் ....இந்த லட்சணத்தில் லாட்டரி ஆட்சி நடக்குது ...
நிர்வாகம் சீர் கேட்டு கிடப்பரத்துக்கு இதுவே சாட்சி.
ஒரு காகிதப்புலி.மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026