சக்தி பீட ரயில் யாத்திரை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து, காமக்யா தேவி உட்பட ஏழு இடங்களை காணும் வகையில், சக்தி பீட ரயில் யாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்புடன் இணைந்து, ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயிலை, இந்தியன் ரயில்வே இயக்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து முதல்முறையாக காமக்யா தேவி உட்பட, ஏழு இடங்களில் சக்தி பீடங்களை காணும் வகையில், சிறப்பு ரயில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில், வரும் டிச., 12ல் புறப்பட்டு, தென்காசி, திருப்பரங்குன்றம், விழுப்புரம், எழும்பூர் வழியாக, இந்த சிறப்பு ரயில் செல்கிறது. ஜெகநாதர் கோவில், விமலா தேவி, கோனார்க் சூரிய கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்யலாம்.

இந்த, 13 நாள் ஆன்மிக சுற்றுலாவுக்கு மூன்றாம் வகுப்பு ‘ஏசி’யில் ஒருவருக்கு 49,780 ரூபாய், ஸ்லீப்பர் பெட்டியில், 36,950 ரூபாய் கட்டணம். முன்பதிவு செய்யவும், கூடுதல் தகவல் பெறவும், 73058 58585 என்ற மொபைல் போன் எண்ணையும், www.tourtimes.in என்ற தளத்தையும் தொடர்பு கொள்ளலாம் என, ‘டூர் டைம்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement