ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது
மேலுார்:
மதுரை மாவட்டம் மேலுாரில் மின் பளுவை குறைக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் ஆனந்த் 50, கைது செய்யப்பட்டார்.
கருத்தபுளியம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் அறிவழகன் 38. சிவகங்கை ரோட்டில் வாடகை இடத்தில் பிளாஸ்டிக் கதவு தயாரிக்கும் தொழில் செய்கிறார். தொழில் தேவைக்காக 3 கி.வா., மின்பளுவை 22 கி.வா., ஆக அதிகரித்து கொண்டார். இந்நிலையில் இடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறினார். இதனால் பழையபடி 3 கி.வா., மின்பளுவாக குறைத்து இடத்தை ஒப்படைக்க திட்டமிட்டு அக். 16ல் மேலுார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் அறிவழகன் விண்ணப்பித்தார்.
இடத்தை ஆய்வு செய்த மின் வணிக ஆய்வாளர் ஆனந்த், மின் பளுவை குறைக்க ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் அறிவழகன் புகார் செய்தார். நேற்று மதியம் மின்வாரிய அலுவலகத்தில் ஆனந்த் லஞ்சம் பெற்றபோது ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, இளந்தென்றல் உள்ளிட்டோர் கைது செய்தனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு