வணிக வளாகத்துக்கு அதிகாரிகள் சீல்

திருநெல்வேலி: திருநெல்வேலி தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளிக்கு எதிரில் சிவந்திப்பட்டி சாலையில் உள்ள கோகிலம் நகரில் ஆண்டனி செபஸ்டியன் என்பவர் ஒரு மாடியுடன் கூடிய வணிக வளாகம் கட்டியுள்ளார். இந்த கட்டடத்துக்கு மாநகராட்சியில் முறையாக கட்டட அனுமதி பெறவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது.

அதன்படி மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் இன்று வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தனர். பாதுகாப்பு பணியில் பெருமாள்புரம் போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement