பஞ்சமி வழிபாடு

சாணார்பட்டி: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு -சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக அம்மனுக்கு திரவிய அபிஷேகம், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தேங்காயில் தீபமேற்றி வழிபட்டனர். யாக பூஜையில் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார்.

இதேபோல் காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராகி அம்மன் கோயிலில் திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement