தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், ஜி.என்.பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் சங்கரபாண்டியன், 47; கோர்க்காடு பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று (அக்.,29) அதிகாலை 5:00 மணியளவில் எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு மீண்டும் வந்து படுத்தார். அதனை தொடர்ந்து வேலைக்கு செல்ல அவரது மனைவி எழுப்பியபோது சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement