இரு தரப்பினர் மோதலில் இன்ஸ்., உட்பட 5 பேர் காயம்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், நமஸ்கரித்தான்பட்டியில் நேற்று (அக்.,29) இரவு, 'பிளக்ஸ்' வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் மோதி கொண்டனர். போலீசார், வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தியபோது, இரு தரப்பினரும் கல் வீசி தாக்கி கொண்டனர்.
இதில், சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பட்டாலியன் போலீசார் மணி, லட்சுமி நாராயணன், பாலசுப்பிரமணியன், ஏட்டு மணிமுத்து ஆகியோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த மணிகண்டன், கலையரசன், சதீஷ்குமார், ஜோதிலிங்கம் உட்பட பலர் மீது, திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
போலீசார் கூறுகையில், 'தடியடியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, அமைதி பேச்சு நடந்து வருகிறது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement