வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.10 ஆயிரம் கோடி: மருந்து கடை ஊழியர் அதிர்ச்சி

2

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகாரில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் வேலைபார்ப்பவர் சமீர்கான்(22). மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாய். மொபைல் செயலி வாயிலாக தனது வங்கிக் கணக்கில் பணஇருப்பு குறித்து ஆராய்ந்தார். அதில் பூஜ்ஜியம் என காட்டியது.

வரவு செலவை பார்த்த போது ரூ.10 ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டு முடக்கப்பட்டது தெரிந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே அவர் சேமித்து வைத்திருந்த 55 ஆயிரம் ரூபாய் பணமும் முடக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரையின்படி வங்கிக் கிளையை நாடினார். அவர்கள் ஆராய்ந்ததில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இவ்வளவு பணம் டெபாசிட் ஆனது தெரிந்தது. பிறகு வங்கி அதிகாரிகள் பிரச்னையை சரி செய்தனர்.

Advertisement