வாராந்திர சிறப்பு பஸ் இயக்கம் குறைப்பு

திருப்பூர்: தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், நடப்பு வார இறுதி நாட்களுக்கான சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய, புதிய மற்றும் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த வாரம் பயணிகள் வரத்து குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சேலம், திருவண்ணாமலைக்கு 15 பஸ்கள்; தென் மாவட்டங்களுக்கு 25 பஸ்கள்; திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழித்தடங்களுக்கு 25 பஸ்கள் என மொத்தம் 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisement