திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஆங்கில வாசிப்புத் திறன் போட்டி: 210 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புதுமுயற்சியாக நடந்த ஆங்கில வாசிப்புத் திறன் போட்டிகளில் 210 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.
8ம் நாளான இன்று (அக்.,30) பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில வாசிப்புத் திறன் போட்டி இந்தாண்டின் புதுமுயற்சியாக நடந்தது. தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். இலக்கியக் களத்தின் கோகிலாதேவி வரவேற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் முன்னாள் பதிவாளர் ராஜேஸ்வரி கண்காணித்தார். 8 பேர் நடுவர்களாக பங்கேற்றனர்.
போட்டிகள், படித்த புத்தகம் குறித்த உரையாடல், செய்திகளின் கதை, என்னுள் உதித்த செய்தி வாசிப்பாளர், கதையில் திருப்பம் ஏற்படுத்துவது, வேகமாக வாசிக்கும் திறன், ஆங்கில வினாடி வினா என ஆறு தலைப்புகளில் நடத்தப்பட்டன. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 210 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் சரவணன் இன்று (அக்.31) பரிசுகள் வழங்க உள்ளார்.
இன்று இரவு 7:00 மணிக்கு மதுரை கலைடாஸ்கோப் மாற்றுக்கல்வி கலை மற்றும் பண்பாட்டு மையத்தின் ‘சேப்பியன்ஸ் வகையறா’ நாடகம் நடந்தது. இதனை திரளான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.
சந்தா ஒன்று; பலன் மூன்று
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் 113ல் ரூ.2,499 செலுத்தி ஓராண்டு தினமலர் சந்தாவில் இணைந்தால் ரூ.500 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இதோடு ரூ.5 லட்சம் மதிப்பில் தனிநபர் விபத்து காப்பீடு, ரூ.1 லட்சம் மதிப்பில் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வீட்டு உடமைகளுக்கான காப்பீடு என மூன்று காப்பீட்டு பலன்களையும் வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.