பா.ஜ. சார்பில் தேசியக்கொடி பேரணி

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் தேசியக்கொடி பேரணி இன்று (அக்.,30) நடைபெற்றது. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய பேரணியை, ஊட்டி எம்.எல்.ஏ. போஜராஜன், பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். பா.ஜ. மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.வினர் பங்கேற்றனர். புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி வரை தேசியக்கொடி, கட்சிக்கொடிகளுடன் ஊர்வலமாக சென்றனர். பள்ளி அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறுகையில், ‘ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் கரப்பான்களுக்கு பின்புலமாக உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் பாதிப்பு என மாயை உருவாக்கி கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றனர்.இந்த பேரணி ராகுல், சோனியா உள்பட ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை மணி’ என்றார்.

நடிகர் தனுஷ் மகளிர் அணி கூட்டத்தில் தாமரை சின்னம் பொறித்த விளக்கு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ‘பா.ஜ. யாருடைய பின்னணியிலும் இல்லை. பா.ஜ. தன்னெழுச்சியோடு செல்லும் இயக்கம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்றார்.

Advertisement