பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகள் விரைவில் கோவில்களுக்கு மாற்றம்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்
சென்னை: 'பாதுகாப்பு மையங்களில் உள்ள உலோக சிலைகள் எல்லாம், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள புராதன உலோக சிலைகளை பாதுகாக்கும் வகையில், மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் வைக்கப்பட்டு உள்ள உலோக சிலைகளுக்கு, ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படவில்லை என்பதால், அவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்ப உத்தவிடக் கோரி, கோவையை சேர்ந்த சிவ பக்தர் டி.சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
சிலைகள் பாதுகாப்பு மையங்களில், ஆகம விதிகள்படி, பூஜைகள், சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்காக, சில மையங்களில், பிரத்யேக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், 1,881 கோவில்களில், சிலைகள் பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டு வருகின்றன; 1,782 கோவில்களில் கட்டுமானம் முடிவடைந்துள்ளது; மீதமுள்ள, 99 கோவில்களிலும் கட்டப்பட்ட பின், பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு உள்ள உலோக சிலைகள், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேட்கிறவன் கேனையன்ன்ன கேப்பையில் நெய் வடியுது என்பானாம் என்ற பழமொழி இந்த செய்தி உணர்த்துகின்றது. கிருத்துவன் முதல்வரானால் இந்து கோவில்களுக்கு என்ன நடக்கும் என்பதை மிக மிக சரியாக விளக்குகின்றது இது
தைரியமாக பொய் சொல்லும் இதுகளுக்கு ஒன்றும் ஆவது இல்லை.
எல்லா சொரியார் சிலைகளையும் அறிவாலயத்துல இறக்கிடுங்க.
அவங்க கிட்ட இருக்கும் 1000 வோட்டும் போய்விடுமே... நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க . நாங்க அந்த வோட்டுக்கு என்ன பண்றது?மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி