வீட்டில் புகுந்த 2 மர்மநபர்கள் பெண்ணை மிரட்டி நகை பறிப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சந்திராவரம் அருகேயுள்ள மணிப்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, விவசாயி; இவர் மனைவி தனலட்சுமி, 55. நேற்று முன்தினம் மாலை கோவிந்தசாமி வெளியே சென்று விட்டார்.

இரவு, 8:00 மணிக்கு வீட்டில், தனலட்சுமி தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த, 2 மர்ம நபர்கள், மின்விளக்கை அணைத்து விட்டு, அவரது வாயை மூடி, வீட்டில் பணம் எங்கே உள்ளது எனக்கேட்டு மிரட்டியுள்ளனர்.பின், தனலட்சுமி அணிந்திருந்த தோடு, தாலி உள்ளிட்ட, ஒன்றே கால் பவுன் தங்க நகை மற்றும் காலில் இருந்த வெள்ளிகொலுசை பறித்துக் கொண்டு, அவரை வீட்டினுள் வைத்து பூட்டிச் சென்றனர். பின், வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கோவிந்தசாமி தனலட்சுமியை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement