நிறுவன செய்திகள்

டாடா மோட்டார்ஸ் வசமானது இத்தாலியின் இவெகோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியை சேர்ந்த வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான இவெகோவில் 89.42 சதவீத பங்குகளை கையகப்படுத்தி, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 343 கோடி யூரோ, அதாவது கிட்டத்தட்ட 36,328 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் வாயிலாக, இவெகோ டாடா மோட்டார்சின் மறைமுக துணை நிறுவனமாகியுள்ளது.

வடகிழக்கு சந்தையில் நுழையும் ஜே.கே. லட்சுமி சிமென்ட்

ஜே.கே. லட்சுமி சிமென்ட் நிறுவனம், அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ராங்சோவில் 'புராஜெக்ட் காமாட்சி' திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும் இந்த ஆலையில், ஆண்டுக்கு 25 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம் 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பிளிப்கார்ட் ஊழியர்கள் மீது வால்மார்ட் லஞ்ச விசாரணை

பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து 150 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அதன் தாய் நிறுவனமான வால்மார்ட் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியை தொடங்கியது 'ஓம்ரான்'

ஜப்பானை சேர்ந்த மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர், சென்னைக்கு அருகே இந்தியாவின் அதன் முதல் ஆலையில் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

ஓம்ரான் ஹெல்த்கேர் மேனுபேக்சரிங் இந்தியா நிறுவனம் வாயிலாக இந்த ஆலை செயல்படுகிறது.இதன் வாயிலாக இந்தியாவில் உற்பத்தியை

விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா குழும நிகழ்வுகள் கண்காணிக்கிறது செபி

டாடா குழுமத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து வருவதாக

செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து

கொல்கட்டாவில்அவர் கூறுகையில், பட்டியலிடப்படாத டாடா சன்ஸ்

நிறுவனத்தில் சில பிரச்னைகள் உள்ள நிலையில், பட்டியலிடப்பட்ட

நிறுவனங்கள்வாயிலாக, செபி கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News

Advertisement