ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: நம் கடற்படைக்காக, 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், எட்டு அடுத்த தலைமுறை அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு கூட்டம் டில்லியில் நேற்று (அக்.,29) நடந்தது. இதில், 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் கடற்படைக்கு எட்டு அதிநவீன போர்க்கப்பல்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை மேற்கு வங்கத்தின், கொல்கட்டாவில் உள்ள, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ், கோவா ஷிப்யார்டு லிமிடெட்' ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்ட பணிகளுடன் எதிரி கப்பல்களை தாக்குதல், நீர்மூழ்கி கப்பல்களை எதிர்கொள்ளுதல், வான்வழி தாக்குதல்களை முறியடித்தல் போன்ற பணிகளில் இந்த கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், அதிக வேகத்தில் திசைமாறி செல்லும் திறன் ஆகியவை இந்த கப்பல்களின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும்.
இந்த திட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே பெறப்படும்.முதல் கப்பலை 2030க்குள் கடற்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
நம் நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்தில், பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் மரைன் போர் விமானம் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கடற்படை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் விமானம், கப்பலின் ஓடுதளத்தில் துல்லியமாக தரை இறங்குவது பதிவாகியுள்ளது.block_B
குடிக்க கஞ்சி இல்லையாம். பந்தியில வைக்க பஞ்சு வேணுமாம்
சீனாக்காரன் கடல்வழியா தாக்குனாலும்... எங்கோ இருக்குறீங்க... பாஜக எதிர்ப்பாளர் ... இவரை உட்டுருவோம் ...
theni saraal, ஐயோ பாவம் உன் குடும்ப கதையில் எவளோ சோகம்.. நீ ஒரு வேலைவெட்டுக்கு போகக்கூடாதா
குட்டி டிரோன்கள் மூலம் பின்தங்கிய நாடுகள் நிறைய சாதிக்கும்போது இந்த மாதிரி முதலீடு தேவையா ? அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் பெரிதாக சாதிக்கவில்லை
எப்போதாவது சீனாவின் ராணுவ பலத்தையும், நமது ராணுவ பலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா ??
நாம் எந்தெந்த விஷயங்களில் பின்தங்கியிருந்தோம், என்னென்ன அம்சங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது
இதைப்பற்றி ஏதாவது தெரியுமா ??
யோக்கியமான நாலு தலைவர்கள் மற்றும் நாலு நல்ல அறிவாளிகள் நிர்வாகத்தில் இருக்கும் பொழுது மட்டுமே இதெல்லாம் சாத்தியம். மோடிக்கும் அவரது குழுவுக்கும் பாராட்டுகள். இந்தியா ஒரு வல்லராக மட்டுமல்லாமல் நல்லராசாகவும் இருக்க அவரது கடும் முயற்சி நல்ல பலனளிக்க பகவான் கண்ணனை பிரார்த்திக்கிறேன்.மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி