விழுப்புரம் அருகே சேவல் சண்டை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சேவல் சண்டையை காண திரளான மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே காரணை பெரிச்சானுார் கிராமத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதலாம் ஆண்டு சேவல் சண்டை கே.ஜி.எப்., மற்றும் ரோமன் பார்ட்டி அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.

போட்டியில், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், புதுச்சேரி, சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 230 ஜோடி சேவல்கள் பங்கேற்றது.

ஒவ்வொரு சேவலும், இரண்டு முதல் நான்கு பரிசுகளை தட்டிச் சென்று அதன் உரிமையாளர்களுக்கு பெருமையை தேடி தந்தது.

இந்த சேவல் சண்டை நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது.

வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களுக்கு கோப்பை, 2 கிராம் வெள்ளி நாணயம், மெடல், சான்றிதழ் மற்றும் எல்.இ.டி., டி.வி., பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த இரு தினங்களாக சேவல் சண்டையைக் காண ஏராளமானோர் குவிந்தனர். இதனால், காரணை பெரிச்சானுார் கிராமமே விழாக் கோலமாக காணப்பட்டது.

Advertisement