இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி விடுதலை நாள் விழா
புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டப்பட்டது.
ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உதயசங்கர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மருத்துவ அதிகாரிகள், துறைத் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற துாய்மைப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கும், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
துாய்மையான மற்றும் பசுமையான வளாகத்தைப் பராமரிப்பதில் அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது. புதுச்சேரியின் வரலாறு, தேசப்பற்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கூட்டு பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு