கடனை செலுத்த முடியாமல் பூ விவசாயி தற்கொலை
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை
அருகே, சாமந்தி பூ விளைச்சல் பாதிக்கப்பட்டதால், கடனை திரும்ப செலுத்த
முடியாமல், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே
கொல்லப்பள்ளியை சேர்ந்த விவசாயி வேணுகோபால், 41; ஒசட்டி அருகே
கரகூர் கிராமத்தில், 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, சாமந்தி பூ
சாகுபடி செய்திருந்தார். இதற்கான செலவுக்கு தனி நபர்களிடம் கடன்
பெற்றுள்ளார்.
எதிர்பார்த்தது போல் பூ விளைச்சல் இல்லாததால்
நஷ்டம் ஏற்படவே மனமுடைந்தார். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில்,
கடந்த, 27ம் தேதி பூச்சி மருந்தை குடித்து விட்டார். அவரை மீட்ட
உறவினர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல்
சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை
உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார்விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு