கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு
ஓசூர்:ஓசூரில், கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் ஏற்பட்டு, வியாபாரியை கொலை செய்த, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்தவர்
பிரவீன்குமார், 37. ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் தங்கி, பழைய
வாகனங்களை வாங்கி விற்று வந்தார். கடந்த, 27ம் தேதி, ஓசூர் அந்திவாடி
மைதானம் பின்புறம், தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். மர்ம மரணம் என
வழக்கு பதிந்து மத்திகிரி போலீசார் விசாரித்த நிலையில்,
பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இது தொடர்பாக,
மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன், 28, செவன்த் டே பள்ளி
அருகே வசிக்கும் ஜிம் கணேஷ், 44, கர்னுார் மாரியம்மன் தெரு திலிப், 26,
தின்னுார் வாசவி நகர் கார்த்தி, 35, காடிபாளையம் அபினாஸ், 29, ஆகிய 5
பேரை, மத்திகிரி இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார்
நேற்று கைது செய்தனர்.
கைதான சீனிவாசன், மத்திகிரி போலீசாருக்கு
கடந்த ஓராண்டாக டீ, காபி வாங்கி கொடுக்கவும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்'
போல், ஸ்டேஷனில் வலம் வந்ததாகவும், அந்த தைரியத்தில் தான் கொலையை
செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
கைதான
சீனிவாசன், அவரது மாமா வெங்கடாசலபதி ஆகியோர் வட்டி தொழில்
செய்கின்றனர். வெங்கடாசலபதிக்கும், கொலையான பிரவீன்குமார்
மனைவிக்கும் இடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு
இருந்துள்ளது. இதையறிந்த பிரவீன்குமார், தனது மனைவியை பிரிந்து
சென்று விட்டார். எனது குடும்பத்தை உனது மாமா சீரழித்து விட்டான் என,
சீனிவாசனிடம் அடிக்கடி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
சமீபத்தில்
உன்னை சும்மா விட மாட்டேன் என பிரவீன்குமார் கூறியதால், தன்னை கொலை
செய்து விடுவானோ என சீனிவாசன் நினைத்தார். தனக்கு ஏதாவது ஆவதற்குள்,
பிரவீன்குமாரை தீர்த்து கட்டி விட வேண்டும் என முடிவு செய்தார்.
அதன்படி கடந்த, 27ம் தேதி பிரவீன்
குமாரை, அவரது நண்பர்கள் மூலமாகவே அந்திவாடி மைதானம் பின்புறம் வரவழைத்து, அவருக்கு மது கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
பிரவீன்குமாருக்கு
மது போதை அதிகமான பின், சீனிவாசனுக்கு போன் செய்து அங்கு
வரவழைத்தனர். அங்கு சென்ற அவர், கிரிக்கெட் ஸ்டெம்பால்,
பிரவீன்குமாரை தலையில் அடித்து கொலை செய்தார். கொலைக்கு
பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளோம். தலைமறைவான
வெங்கடாசலபதியை தேடி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி