குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
தர்மபுரி:தர்மபுரி
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், குறைகளை கேட்க
அதிகாரிகள் இல்லையென கூறி, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
தர்மபுரி
மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சரவணன் தலைமையில்
நேற்று நடந்தது. பல்வேறு பகுதி விவசாயிகள், குறை மற்றும் கோரிக்கைகளை
தெரிவித்து பேசிய நிலையில், வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து
விவசாயிகதள் கூறியதாவது: தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க
வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும்
கூட்டத்தில், முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. அலுவல் பணி
காரணமாக, கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கலெக்டர் சென்று விட்டார்.
அவருக்கு அடுத்த நிலையில் உள்ள டி.ஆர்.ஓ.,வும் இல்லை. எனவே விவசாயிகள்
தெரிவிக்கும் கோரிக்கை, அரசின் கவனத்திற்கு செல்ல வாய்ப்பில்லை.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், தன்னுடைய அறைக்கு வந்து பதிலை
கேட்டு கொள்ளுங்கள்; இங்கெல்லாம் பதில் கூறமுடியாது என கூறிவிட்டார்.
இதனால் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
சாமானியர்களை பாதிக்கும் மளிகை விலை உயர்வு மூன்று மாதங்களில் கட்டுக்குள் வருமென எதிர்பார்ப்பு
-
பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகள் விரைவில் கோவில்களுக்கு மாற்றம்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்
-
நிறுவன செய்திகள்
-
மின் வாகன உதிரிபாக உற்பத்திக்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும்
-
உலகின் பெரும்பகுதி நாடுகளில் இந்திய பொருட்களுக்கு சலுகை
-
வீட்டில் புகுந்த 2 மர்மநபர்கள் பெண்ணை மிரட்டி நகை பறிப்பு