யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
பெயருக்கு தான் நடைபாதை; ஹீல்ஸ் அணிவோர் ஜாக்கிரதை
டில்லியில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை, சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. மழைநீர் நிலத்துக்குள் இறங்குவதற்காக, பெரிய சதுரத் துளைகள் கொண்ட கான்கிரீட் கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன. 'நீர் துளைகள் வழியாக நிலத்துக்குள் செல்லவே புதிய நடைபாதை' என்கிறது, மாநகராட்சி.
இதை மோசமான கட்டுமானம் என்று விமர்சிக்கும் சிலர், துளைகளை அப்படியே விடாமல், மண் அல்லது சரளைக் கற்கள் நிரப்ப வேண்டும் என்று கமென்ட் செய்கின்றனர். 'ஹீல்ஸ் அணியும் பெண்கள் இந்த பாதையில் நடக்க முடியாது' என்று சிலரும், 'சிறு பொருட்கள் துளைகளுக்குள் விழுந்துவிடலாம்' என்றும் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
உள்ளத்தை வென்றது துள்ளல் நடனம்
டில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் மாணவி சனா ஆடிய உற்சாகமான பாங்க்ரா நடனம், வலைதளங்களில் உற்சாகமான வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரியில் நடந்த இந்நிகழ்ச்சியின் வீடியோ, பல மாதங்களுக்குப் பிறகு இப்போது வைரலாகியுள்ளது. பஞ்சாபி மொழியில் வெளியான 'ஆஷிக்' பாடலுக்கு சனாவும் மற்றொரு பெண்ணும் குர்தா உடையில் துள்ளல் நடனமாடினர்.
பாடல், இசைக்கு தகுந்தபடி இருந்த அவர்களது நடனம், பார்வையாளர்களின் ஆரவாரத்தை பெற்றது. 'எனக்கு பஞ்சாபி நாட்டுப்புற நடனத்தில் பயிற்சி இல்லை. குறுகிய நேரத்தில் நடன அசைவுகளைக் கற்றுத்தந்த நடனக் கலைஞருக்கு நன்றி' என்று சனா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
டில்லி வடகிழக்கு பாஜ எம்.பி., மனோஜ் திவாரி, யமுனையில் நீச்சல் அடித்த செய்தி, வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. 'நாங்கள் டில்லி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும், யமுனை நதியை சுத்தம் செய்து விட்டோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் 27 ஆண்டுகளில் செய்ய முடியாததை, பாஜ அரசு ஒன்றரை ஆண்டில் செய்து விட்டது' என்று அறிவித்தார், திவாரி.
'சும்மா சொன்னால் மட்டும் போதாது' என்று நினைத்தவர், யமுனையில் குதித்து நீச்சல் அடித்து, கொஞ்சம் குடித்தும் காட்டி விட்டார். ' என்றும் அவர் கூறினார். ஆம் ஆத்மியோ அவர் செய்ததை ஏற்க மறுக்கிறது. 'அவர் குளித்த இடத்தில் தண்ணீர் நன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் சொல்லும் இடத்தில் இருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டும்' என்கிறார், ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்.
தோசை ருசித்த ஜெர்மானியர்; பாதி இந்தியர் ஆகி விட்டார்!
பெங்களூருவில் படிக்கும் ஜெர்மானிய மாணவர் மேட்ஸ், உணவகத்தில் தோசையுடன் பில்டர் காபியை ருசித்து சாப்பிட்ட வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.
'ஜெர்மானியரான நான், பெங்களூரு ஜெயநகரில் தோசையும், பில்டர் காபியும் சாப்பிட்ட பிறகு, ஏதோ ஒரு வகையில் வீட்டில் இருப்பதை போல் உணர்கிறேன்' என்று கூறியுள்ளார். வலைதளவாசிகள், கேலி, கிண்டலான கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். 'சாப்பிட்ட தோசை, அவரை பாதி இந்தியர் ஆக்கி விட்டது' என்கிறார் ஒருவர். 'அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டு விட்டது' என்று இன்னொருவரும், 'அதிகாரபூர்வமாக அவர் இப்போது ஜெயநகர் குடிமகன் ஆகிவிட்டார்' என்றும் பதிவிட்டுள்ளனர்.
காய்கறி வாங்க வந்த இடத்தில் களை கட்டியது ஆடல் பாடல்
குஜராத்தின், ஆமதாபாத் டிபார்ட்மென்டல் ஸ்டோரில், நடனம் ஆடியபடி வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிய நிகழ்வு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதற்கென பெண் 'டிஜே' ஒருவரையும் ஸ்டோர் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பாடல் இசைக்கு ஏற்றபடி 'டிஜே' நடனமாட, அவரைச் சுற்றிலும் வாடிக்கையாளர்கள் ஆடிக் கொண்டிருக்க, வியாபாரமும் களை கட்டியது.
நைட் கிளப் அல்லது இசை நடன நிகழ்ச்சி போல, அன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. 'காய்கறி வாங்க வந்த பலர், இசை, நடனத்தை பார்த்து மெய்மறந்து எதுவுமே வாங்காமல் சென்றிருப்பார்கள்' என்று, கேலி, கிண்டலான பதிவுகளை வலைதள பிரியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மயிரிழையில் தப்பிய மணமகள்
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் திருமண போட்டோஷூட் எடுக்கச்சென்றனர், புது மண தம்பதி. ஒன்றாக சேர்த்து கட்டிய ஏராளமான பலுான்களை மணப்பெண்ணை பிடிக்கச் சொல்லி விட்டு, அங்கிருந்து எல்லோரும் சென்று விட்டனர். காற்றின் வேகத்தில் பலுான்கள் இழுக்க, மணப்பெண்ணும் சேர்ந்து சென்றார்.
'அவர் காற்றில் இழுத்துச் செல்லப்படுவாரோ' என்று அஞ்சும் நேரத்தில், ஒருவர் பிடித்துக் கொண்டார். மணப்பெண் மயிரிழையில் தப்பிய வீடியோ, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி