ஒரே நாளில் கைதிகள் 2 பேர் தப்பியோட்டம்; ஒருவர் கோவை, மற்றொருவர் சென்னை!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் கோவையில் கைதி ஒருவரும், சென்னையில் கைதி ஒருவரும் என இருவர் தப்பிய ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை அன்னூர் போலீஸ் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன் (25), சிறை வாசலில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இவர் கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு கர்நாடக போலீசார் ராகவனை கோவைக்கு ஒரு வழக்குக்காக அழைத்து வந்தனர். அப்போது அன்னூர் அடுத்த கணுவ கரையில் இயற்கை உபாதை என போலீஸ் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கர்நாடக போலீஸ் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தப்பிய கைதி ராகவனை கைது செய்வதற்காக உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
@block_P@
சஸ்பெண்ட்!
தப்பிச் சென்ற கைதியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.block_P@block_G@
முதியவர் தப்பியோட்டம்
சென்னை புழல் அருகே போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட்சன் (60) என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.block_G
சிறப்பு வீடியோ!
கோவை கைதி தப்பி ஓட்டம்; தமிழகத்தில் தொடரும் அவலம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் எனில், தமிழக சிறைகளில் என்னதான் நடக்கிறது?
கர்நாடக போலீஸ் தப்ப விட்ட கைதியை தமிழக போலீஸ் பிடித்து தப்ப விட்டு விட்டார்கள் .இப்போ இரண்டு மாநிலங்களிலும் கேஸ் வந்து விட்டது .அடுத்து கேரளா செல்லலாம்மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026