காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி

1

-நமது சிறப்பு நிருபர்-

ஜம்மு காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. சதீஷ் ஷர்மா நீக்கப்பட்டதால், அமைச்சரவையில் ஒரே ஒரு ஹிந்து அமைச்சர் மட்டுமே உள்ளார். இதன்மூலம், 70 ஆண்டில் அமைச்சரவையில் ஹிந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் முதல்முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதிருப்தியடைந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் தலைமைக்கு எதிராகக் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏக்கள் ஸ்ரீநகரில் ரகசியக் கூட்டம் நடத்தி, உமர் அப்துல்லா அரசுக்கு எதிராக ஒரு கூட்டுத் தீர்மானத்தைத் தயாரித்துள்ளனர். அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், தகுதி மற்றும் சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் ஆலோசகர் நசீர் அஸ்லாம் வானி மற்றும் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி ஆகியோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும், அமைச்சரவையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என அதிருப்தி குழுவினர் 15 நாட்கள் கெடு விதித்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவரான பரூக் அப்துல்லா, முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அதிருப்தி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.

Advertisement