செல்வ சிந்தாமணி குளத்தின் உபரி நீருக்கு மாற்று வழி ஐ.ஐ.டி. குழுவினரை வரவழைத்து தீர்வு காண்பதே சரி
கோவை: வழக்கமாக ஒரு குளத்தில் தண்ணீர் தேக்கும்போது, உபரி நீர் ஆற்றில் செல்லும் வகையிலும், மதகு வழியாக அடுத்த குளத்துக்குச் செல்லும் வகையிலும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். செல்வ சிந்தாமணி குளத்தில் மதகும், உபரி நீர் செல்லும் மிகைபோக்கியும் அருகருகே ஒரே இடத்தில் உள்ளது. உபரி நீரும், மதகு வழியாக வெளியேற்றும் நீரும் ஒரே வாய்க்காலில் வருகிறது. ரோட்டை கடந்து எதிர்புறமுள்ள சிறிய தொட்டி போன்ற கட்டமைப்பில் தேங்கி, மறுபுறமுள்ள வாய்க்காலுக்கு செல்கிறது.
செல்வபுரம் ரோடு சந்திப்பில் வாய்க்கால் அகலமாக இருக்கிறது. பின், அகலம் சுருக்கப்பட்டிருக்கிறது. உக்கடம் நோக்கிச் செல்லும் திருப்பத்தில் வாய்க்காலும் திரும்புகிறது. அவ்விடத்தில் சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது; அதன் வழியாக உக்கடம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.
ஒரு குளத்தில் இருந்து இன்னொரு குளத்துக்கு தண்ணீர் தடையின்றி, பயணிக்கும் அளவுக்கு வாய்க்கால் உருவாக்கி இருக்க வேண்டும்; ஆக்கிரமிப்பு ஏற்படாத அளவுக்கு கண்காணிக்க வேண்டும். ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் நீரின் வழியை திசை மாறி மாறிச் செல்லும் அளவுக்கு அதன் போக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
கன மழை பெய்து சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்திருக்கிறது.
மதகு வழியாக வெளியேறும் தண்ணீர் உக்கடம் பெரிய குளத்துக்கோ அல்லது வாலாங்குளத்துக்கோ செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். மிகை போக்கியில் வெளியேறும் உபரி நீர் நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
குளத்தில் தேக்கியுள்ள நீரை கண்காணிக்க நீர் வளத்துறையில் தனியாக ஆட்கள் பணிபுரிகின்றனர். மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 9 குளங்களை கண்காணிக்க ஆட்கள் இல்லை. அந்தந்த வார்டு உதவி பொறியாளரே கவனிக்க வேண்டும். மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதால், குளத்தை பற்றி இவர்கள் அக்கறை கொள்வதில்லை. மழை காலத்தில் நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு குளத்துக்கும் பிரத்யேகமாக ஆட்கள் நியமிப்பதோடு, மதகை திறந்தால் எவ்வளவு தண்ணீர் வெளியேறும் என்கிற கணக்கீடு தெரிந்திருக்க வேண்டும். கூடுதலாக தண்ணீர் வெளியேறினால், வாய்க்கால் பொங்கி, குடியிருப்புக்குள் செல்லும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.
ரோட்டுக்கு கீழே கான்கிரீட் பாக்ஸ் அமைத்து வாலாங்குளத்துக்கு உபரி நீர் எடுத்துச் செல்லும் வேலை செய்வது பல மாதங்கள் இழுத்தடிக்கும்; கோடிக்கணக்கில் செலவாகும். அதை தவிர்த்து, சென்னை ஐ.ஐ.டி. குழுவினரை வரவழைத்து மாற்று திட்டத்தை வகுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை சமயத்தில் இதே பிரச்னை உருவாவதால் நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி