ஸ்டார்லிங்க்கை எலான் மஸ்க்கிடம் இருந்து பறிக்கும் நேரம் வந்து விட்டது; நோபல் பரிசு பெற்ற நிபுணர் வலியுறுத்தல்
ஸ்டார்லிங்க் ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பம்; இவ்வளவு பெரிய அதிகாரம் ஒரே நபரின் கைகளில் இருக்கக் கூடாது; ஏதோ ஒரு வகையில் அதை எலான் மஸ்க்கிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் தளம் ஆகியவற்றின் உரிமையாளர். அவரது நிறுவனம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை சுற்றி வரச் செய்துள்ளது.
அவற்றை பயன்படுத்தி, தடையற்ற இணைய சேவையை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்குகிறது.
இதை காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளின் அரசுகளை அச்சுறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது ஸ்டார்லிங்க் இணைய வழிச்சேவையை உக்ரைன் ராணுவம் நம்பியுள்ள நிலையில், திடீரென தன்னிச்சையாக முடிவெடுத்து இணைய சேவையின் வேகத்தை எலான் மஸ்க் குறைத்து விட்டார்.
இது, உலகம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எலான் மஸ்க் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன் கூறியிருப்பதாவது:
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எந்தவொரு தனிநபருக்கும் இருக்கக் கூடாது. எனவே ஸ்டார்லிங்க்கை எலான் மஸ்க்கிடம் இருந்து பறிக்கும் நேரம் வந்துவிட்டது.
ஸ்டார்லிங்க்கை பயன்படுத்துவது குறித்த முடிவுகள் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களாகவே கருதப்பட வேண்டும். உக்ரைன் எப்போது, எப்படி ஸ்டார்லிங்க்கைப் பயன்படுத்தலாம் என்பதை மஸ்க் தீர்மானிக்க அனுமதிப்பது, போரில் அவருக்கு நேரடிச் செல்வாக்கைத் தருகிறது.
இந்த முடிவு வணிக உரிமையாளர்களிடம் அல்ல, அரசாங்கங்களிடமே இருக்க வேண்டும்.
எந்தவொரு தனிநபரும் தேசியப் பாதுகாப்புக் கொள்கையை வகுக்கக் கூடாது; அதற்கான திறனைக்கூடக் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு முக்கிய ராணுவச் சொத்தை ஒரு இனவெறியர், சர்வாதிகாரப் போக்குடைய சதிக்கோட்பாட்டாளரின் கைகளில் விடுவது முற்றிலும் பொறுப்பற்ற செயல்.
இவ்வாறு க்ரூக்மேன் தெரிவித்துள்ளார்.
ELON MUSK, BILL GATES போன்றவர்கள் கொடிய ராக்ஷஸர்கள்.
இவர்களை அடக்கி செயலிழக்க செய்தால்தான் உலக நாடுகள் BALCK MAIL ல் இருந்து தப்பிக்கமுடியும்
நம்மூர் ஜோகோவும் , மற்றும் boss
போன்ற ஓ.எஸ்களும் பிரபலமாவது அரசின் கையிலும் இருக்கிறது.
எலான் மஸ்க் ஒரு நூதன இறையாண்மை திருடன். உலகம் புரிந்து கொள்ளவேண்டும்.
இவன் கையிலிருந்து உலகை அச்சுறுத்தும் ஸ்டார்லிங்க்கை பறிப்பது அமெரிக்க அரசிடம் மட்டுமே தற்போது உள்ளது. நம்மூர் கழிசடைகள் ஒரு ஐந்து பைசா கம்மியாக ஒரு பொருள் கிடைத்தால் போதும். சோறு தண்ணி கூட இல்லாமல் கியூவில் போய் மணிக்கணக்காய் நாட்கணக்காய் நிற் பானுவ. இல்லை என்று கூற முடியுமா? கட்டுப்பாடோ நாட்டுப்பற்றோ கிடையாது. இது தெரிந்து தான் மஸ்க் முதல் மூன்று மாதங்கள் இலவசமாகவே கொடுத்து வலையில் வீழ்த்துவான்.
சரிதான் சார்.
ஸ்டார்லிங்கள் எலான் மஸ்க்கின் உடையது, அவர் தன் பணத்துடன் அவர் விரும்பினதைச் செய்ய உரிமை வாய்ந்தவர்.
ஒரு நொபல் பரிசு பெற்றவரின் அறிவு நிலை கவலைக்குரியது.
ஸ்டார்லிங்க்கை எலான் மஸ்க்கிடம் இருந்து பறிக்கும் நேரம் வந்து விட்டது நோபல் பரிசு பெற்ற நிபுணர் வலியுறுத்தல் . தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது . இந்தியாவின் நிலைப்பாடு மிக சரியானதே
இதே இந்தியாவில் இருந்த அடிமை திருட்டு திராவிட கான் க்ராஸ் கொள்ளை கூட்ட கூட்டணி அரசாக இருந்திருந்தால் மஸ்க் கிடம் மண்டி இட்டு இருக்கும் . ஆனால் இந்தியர்கள் செய்த புண்ணியம் பிஜேபி மோடி அரசால் மேக் இன் இந்தியா திட்டத்தால் மற்ற நாடுகளை நம்பி இருக்க அவசியம் இல்லாமல் செய்து விட்டது....
இப்பொழுது எல்லோருக்கும் புரியும் இந்தியா ஏன் எல்லா விஷயங்களிலும் நன்கு சிந்தித்துச் செயல்படுகிறது என்று.
உண்மைதான் உங்களுக்கு புரியுது, எங்களுக்கும் புரியுது, டிரம்புக்கு புரியவில்லை எலான்மாஸ்க்கோடு கூட்டு பிசினஸ் பண்ணுகிறார், மோடிக்கு புரியவில்லை அம்பானிக்கும், அதானிக்கும் எல்லாவற்றிலும் வளைந்து நெளிந்து கொடுக்கிறார்...
நோபல் பரிசு பெற்றவரின் கூற்று உண்மையானது. இந்திய சட்ட திட்டங்களை மதிக்காமல் அவரால் இந்தியாவிற்குள் காலூன்ற முடியவில்லை. நமது மத்திய அரசும், மோடியும் தேசத்தின் பாதுகாப்பில் அவருடன் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை.ஆனால் ராகுல் போன்ற பார்ட் டைம் அரசியல்வாதிகள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப் படாமல் எலான் மஸ்கிற்கு பட்டுக் கம்பளம் விரிக்கத் தயாராகி விட்டனர்.
உலக அமைதியை கெடுக்கும் நிறுவனங்கள் 1) மெட்டா 2) ஸ்டார் லிங்க் 3) கூகிள். இவர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த உலகம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. Facebook இன் ஒரு ஸ்தாபகர் அதை விட்டு விலகிய காரணமும் இது தான்.மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி