பொது சேவையில் நேர்மை என்பது இயல்பானதாக இருக்க வேண்டும்; துக்காராம் முண்டே 'பளிச்' பதில்
புதுடில்லி: நேர்மையாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே ஒரு இயல்பான நடைமுறையாக இருக்க வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் கூறி உள்ளார்.
மஹாராஷ்டிராவில், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனரான ஐஏஎஸ் அதிகாரி துக்காராமை அறியாதவர்கள் வெகு சிலரே. உணவு கலப்படம், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஓட்டல்கள் மீது எடுத்த நேர்மையான, கண்டிப்பான நடவடிக்கையால் அவரை மஹாராஷ்டிரா மக்கள் ஒரு ஹீரோவாக பார்க்கின்றனர்.
நான் ஒரு ஹீரோ கிடையாது என்றும் மக்கள் சேவகன் மட்டுமே என்ற அவரின் கூற்று, துக்காராம் பற்றிய பலரின் எண்ணங்களை இன்னும் மேலோங்கச் செய்துள்ளது. துக்காராமை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து இருக்கிறார் பலரால் அறியப்படும் பெரும் தொழிலதிபரும், ஆர்பிஜி குழுமங்களின் சேர்மனுமான ஹர்ஷ் கோயங்கா.
அவருடனான தனது சந்திப்பை சிலாகித்து, எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவர் ஒரு ஹீரோ, பெரும் ஓட்டல் நிறுவனங்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படுகிறார் என்று பாராட்டி இருக்கிறார்.
அவரின் பதிவு விவரம் வருமாறு;
அந்தி சாயும் ஒரு மாலை பொழுதில் அந்த நாயகன் துக்காராம் முண்டேவை நான் சந்தித்தேன். பலரும் அவரை சந்திக்க விரும்பினர். காரணம், ஒரு நாட்டின் மக்கள், அரசு அதிகாரியிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை அவர் செய்து கொண்டு இருப்பதுதான்.
பெரும் செல்வாக்குமிக்க ஓட்டல் நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவு பொருட்களில் கலப்படம், தூய்மையின்றி காணப்படும் சமையல் கூடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நேர்மையாக, மனஉறுதியோடு தனது கடமையை செய்யும் ஒரு அதிகாரியானவர், மக்களின் நாயகனாக உருவெடுப்பது என்பது வியப்பான விஷயம். அரசின் நிர்வாகத்தில் இவரை போன்ற உதாரண புருஷர்கள் மிக குறைவாகவே இருப்பது தான், அந்த அமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை காட்டுகிறது.
இவ்வாறு ஹர்ஷ் கோயங்கா பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அவரின் மனம் திறந்த பாராட்டுகளை கண்ட துக்காராமும் தனது எக்ஸ் பதிவில் ஒரு பதிலை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது;
மக்கள் சேவை என்பது நாட்டின் மக்களுக்கானது. எப்போதுமே ஒரு தனிப்பட்ட நபரை பற்றியது அல்ல. நேர்மையுடனும், துணிச்சலுடன், மன உறுதியுடனும் சேவை செய்வது தான் மக்கள் சேவையாகும்.
நாட்டில் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மிக சிறப்பான பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் என்னை விடவும் சிறப்பான முறையில் செயல்படலாம். பெரும்பாலும் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை எனலாம்.
பொது சேவை செய்ய வேண்டும் என்று இயங்கும் ஒரு குழுவில், துக்காராம் என்னும் நான் ஒரு பகுதி மட்டுமே. எங்களின் ஒவ்வொரு வெற்றியுமே, எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததே ஆகும். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையே எங்களுக்கு தரப்பட்டுள்ள மிக பெரிய பொறுப்பாகும்.
பொறுப்பான அமைப்பை கொண்ட ஒரு சேவையானது, எப்போதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது. அது என்றுமே சாதாரண, இயல்பான ஒரு செயலாகவே இருக்க வேண்டும்.
இவ்வாறு துக்காராம் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
தயவு செய்து இவரைப் பற்றிய புகழஞ்சலியைக் குறைத்துக்கொள்ளவும்! இவர் அடுத்த கெஜ்ரிவாலாக வளர்க்கப் படுகிறார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் ஏன் திடீரென இவ்வளவு வெளிச்சம் வெளிநாட்டு ஊடகங்கள் கூட இவர் மீது அடிக்கின்றன? வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம்! பாரதத்தில் நடக்கும் பல்வேறு குளறுபடிகளுக்கு காரணமானவர்களே இவரைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் நாம் நிறைய யோசிக்க வேண்டும்.
My daughter as a practicing Company Secretary said a few years back that there was absolutely "no ethics" in most of the corporates and as such frustrated to look into the reality. People have totally forgotten about human values
அப்படினா என்ன? கிலோ என்ன விலைனு கேட்க்கும் உலகம். இன்று மிக, மிக அபூர்வமான குணம்.
அப்படி ஓன்று இருக்கிறதா
next ..23? ..,transfer order imminentமேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026