ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம் போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி: தைலாவரத்தில் மர்மமான முறையில், ஆட்டோ ஓட்டுநர் பூவிழி ராஜா, 37 என்பவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பூவிழி ராஜா, 37; ஆட்டோ ஓட்டுநர்.
பூவிழிராஜா நேற்று (அக்.,30) மாலை ரத்த வாந்தி எடுத்தபடி வீட்டுக்குள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரி போலீசார், பூவிழிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், போலீசார் வழக்கு பதிந்து பூவிழிராஜா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என, அவரது மனைவி சுசீனா செவ்வந்தியிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026