புதிய கார் பழுதானதால் ரூ.1 லட்சம் இழப்பீடு

கோவை: சிங்கநல்லூரை சேர்ந்தவர் சுபிக்ஷா, 28. கோவையிலுள்ள எஸ்.ஜி.ஏ., ேஷாரூமில், 2025, ஜன.6ல் ஸ்கோடா கார் வாங்கினார். காருக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் உத்தரவாதம் சேர்த்து 14.17 லட்சம் ரூபாய் செலுத்தினார். கார் வாங்கி ஓட்டிய சில நாட்களில் இன்ஜின் பழுதானது.

கார் விற்பனை நிறுவனத்துக்கு தெரிவித்தபோது பழுதுநீக்கி தருவதாக தெரிவித்தனர். நிறுவனத்திடம் கார் ஒப்படைக்கப்பட்டது. கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றனர். உத்தரவாத காலம் இருந்தும் பணம் கேட்டதால் சுபிக்ஷா மன உளைச்சல் அடைந்தார்.

இழப்பீடு கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement