ரோட்டில் சிதறிய கற்கள் டூவீலர் பஞ்சராவதால் அவதி

மானாமதுரை: மானாமதுரையில் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் நடந்து செல்பவர்களின் கால்கள் காயமடைவதோடு டூவீலர்கள் அடிக்கடி பஞ்சராகி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக மானாமதுரைக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளுக்காக டிராக்டர், சிறிய சரக்கு

வேன்கள், லாரிகளில் ஜல்லிகள்

உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் கொண்டு செல்கின்றனர். வேகத்தடை மற்றும் பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கும்போது ஜல்லிகற்கள் ஆங்காங்கே ரோட்டிலேயே சிதறி விழுவதால் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் கால்கள் காயமடைவதோடு மட்டுமில்லாமல் டூவீலர்களும் அடிக்கடி பஞ்சராகி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

பாதுகாப்பற்ற முறையில் ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் கலவை இயந்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Advertisement