கால்நடை மருத்துவமனை அமைக்க பொது மக்கள் வலியுறுத்தல்

மதுராந்தகம்:

வெள்ளப்புத்துார் ஊராட்சியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளப்புத்துார் ஊராட்சியில், 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

வெள்ளப்பத்துாரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த சுற்று வட்டார பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லாததால், 15 கி.மீ. துாரமுள்ள, மதுராந்தகம் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

கால்நடைக்கு தடுப்பூசி போட அழைத்து செல்லவும் கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், கால்நடைகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு கால்நடை மருத்துவர்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெள்ளப்புத்துார் ஊராட்சியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement