திமுக ஆட்சியில் காவல்துறை யாரால் கட்டுப்படுத்தப்பட்டது; ஸ்டாலினா?சபரீசனா? அமைச்சர் ஆதவ் கேள்வி

1

சென்னையில் அமைச்சர் ஆதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி ஒரே ஒரு தரவை மட்டும் வெளியிட வேண்டும் என்று நினைக்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாரால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஸ்டாலினா? அவரது மருகனா (சபரீசன்)? உதயநிதியா? துபாயில் ஒளிந்து கொண்டிருக்கும் உதயநிதி நண்பர் ரத்தீஸா? எல்லா எஸ்பி்களையும் டிரான்ஸ்பர் செய்தது ரத்தீஷ். காவல்துறை ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கண்ட்ரோலில் இருந்தது. தற்போது முதல்வர் விஜய் காவல் துறையை புனரமைத்து கொண்டு இருக்கிறார்.

மகளிரே இல்லாத ஒரு மகளிர் அணி மீட்டிங். இளைஞர் அணி மீட்டிங் என்று போடுவார்கள் இளைஞர்களே இருக்க மாட்டார்கள். மாணவரணி போராட்டம் என்று சொல்வார்கள் மாணவர்களே இருக்க மாட்டார்கள்.

திமுகவுக்கும்,ஸ்டாலினுக்கும் காலையில் எழுந்து இரண்டு வீடியோவை ரிலீஸ் செய்ய வேண்டும். தினமும் திட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கனவில் இருந்தார்கள்.

இன்னும் அந்த கனவிலேயே இருப்பதனால், ஒரு பெரிய பிரச்னை நடப்பது போல் தினமும் பேசிக்கொண்டே இருந்தால் மக்கள் மத்தியில் முதல்வருக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் எதற்கும் பதில் சொல்லாமல் எங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் எதிர்பார்ப்பது அதிகமாக பேசுவதை விட, செயலில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி விட்டோம். 50 வருடங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம். செயலில் நிரூபித்து ஊழல் இல்லாத மக்களுக்கான நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் எங்கள் கவனம் இருக்கிறது. ஸ்டாலின் இன்னும் நிறைய வீடியோக்களை போடட்டும், மற்றவர்கள் பொய்யான பரப்புரைகளை செய்யட்டும். அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மக்களுடைய பிரச்னைகளை சரி செய்ய முதல்வர் விஜய் தலைமையில் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.

Advertisement