அமைச்சு பணியாளர் நலச் சங்க கூட்டம்

தேனி: தேனியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப்பணியாளர் நலச்சங்க, மாவட்ட கூட்டம் நடந்தது. பெரியகுளம் ஒன்றிய தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு இன்றி பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு பெறும்வரை நேரடி உதவியாளர் நியமனம் நிறுத்துதல், 2020 மார்ச் 10க்கு முன்பு கணித தேர்வு பாகம் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்குதல், புதிய பொறுப்பாளர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்தல் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் விஜயராகவன், பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement