சாயல்குடியில் கழிவுநீர் வாறுகாலில் கொட்டப்படும் கால்நடை கழிவுகள்
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி 2–வது வார்டு செட்டியார் தெருவில் வசிப்போர் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நேரடியாக பொது கழிவுநீர் வாறுகாலில் கொட்டி விடுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாட்டுச்சாணத்தில் புழுக்கள் நெளிந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பலருக்கும் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகிறது.
எனவே சுகாதாரத்துறையினர் வாறுகாலில் ஆண்டுக் கணக்கில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement