தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

விழுப்புரம்: விழுப்புரத்தில், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தலைமையில், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், உறுதிமொழி ஏற்றனர். பொது மேலாளர்கள் ரவீந்திரன், ஜெகதீசன், தணிக்கை அலுவலர் துர்க்கைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement