தமிழகத்தில் 6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி
சென்னை: தமிழக விவசாயிகளிடம் இருந்து, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக கிலோவுக்கு, 52.05 ரூபாய் ஆதரவு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில், அரிசிக்கு பதில், 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசும், ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானியங்களை சேர்த்துள்ளது.
தமிழகத்தில், 2025 நவ., முதல், 2026 பிப்., வரையிலான சீசனில், 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் அனுமதி அளித்தது. கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு கிலோ, 48.86 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டது.
கேழ்வரகு அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலத்தில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு பிப்ரவரியில் சீசன் முடிவடைந்த நிலையில், ஆக., வரை நீட்டிக்கப்பட்டது. அந்த சீசனில், 4,741 விவசாயிகளிடம் இருந்து, 8,900 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.
வரும் சீசன், டிச., 1ல் தொடங்கி, 2027 பிப்.,யில் முடிவடைகிறது. அப்போது, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிலோ கேழ்வரகிற்கு, 52.05 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி