விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு
புதுடில்லி: சாலை விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு, 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க டில்லி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்தவர் பூரன் மால். லாரி டிரைவர். கடந்த, 2018ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து டில்லிக்கு சரக்கு லாரியை ஓட்டி வந்தார். ஜெய்பூரின் மனோஹர்பூர் புலியா சரஸ்வதி கல்லூரி அருகே, லாரி மீது டிரெய்லர் லாரி மோதியது. பலத்த காயம் அடைந்த பூரன் மால், அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
இழப்பீடு கேட்டு பூரன் மால் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த, டில்லி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய தலைவர் விஜய்குமார் ஜா பிறப்பித்த உத்தரவு:
டிரெய்லர் லாரி டிரைவரின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற செயலால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்தில் உயிரிழந்த பூரன் மால் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 9.82 லட்சம் ரூபாயை ஆறு சதவீத வட்டித் தொகையுடன் மொத்தம் 14.49 லட்சம் ரூபாயை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இந்த காப்பீடுத் தொகையை டிரெய்லர் லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளர் ஆகிய இருவரும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட தீர்ப்பாய தலைவர் இந்த வழக்கில் இருந்து காப்பீட்டு நிறுவனத்தை விடுவித்தார்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி