கொசுக்கடியால் கால்நடை பாதிப்பு
தேவிபட்டினம்: கொசுக்கடி பாதிப்பால், இரவு நேரத்தில் கால்நடைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
மாவட்டத்தில், தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆடுகள் வளர்ப்போர் தங்களது ஆடுகளை மேய்ச்சல் பகுதிகளை தேடி, பல்வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து மேய்ச்சலுக்கு கொண்டு செல்கின்றனர். பெரும்பாலும், தரிசு நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பெரிய கண்மாய் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்கின்றனர்.
இரவில், கண்மாய் கரைகள், மேடான பகுதிகள் உள்ளிட்டவைகளில் கால்நடைகளை அடைத்து வைத்து மறுநாள் மேய்ச்சல் நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மேய்ச்சலுக்கு கொண்டுவரப்பட்ட, ஆடுகள் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் கொசுக்கடி அதிகரிப்பால் கால்நடைகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றன.
இதனால் கால்நடைகள் வளர்ப்போர், ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட பட்டியைச் சுற்றிலும் கொசுவலைகளை கட்டி, தற்காலிகமாக கொசுக்கடியில் இருந்து ஆடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026