இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
பழவேற்காடு: பழவேற்காடில், கள்ளகாதல் விவகாரத்தில், 19 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 22 வயது வாலிபரை போலீசார் இன்று (அக்.,31) கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்த சிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த், 19. கடந்த, 27ம் தேதி சென்னை வந்த இவரை காணவில்லை என அவரது உறவினர் ரமேஷ், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சந்தேகத்தின்பேரில், புதுப்பேட்டை போலீசார் பிரசாந்தின் நண்பர்கள் தேவராஜ், 19, தினேஷ், ,23, ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், கள்ளகாதல் விவகாரத்தில், அடித்து கொலை செய்யப்பட்டு பழவேற்காடு கடற்கரையில் புதைக்கப்பட்டது தெரிந்தது.
திருப்பாலைவனம் போலீசார் கொலை வழக்கு பதிந்து, தேவராஜ், தினேஷ் ஆகியோர் கைது செய்தனர்.
இந்நிலையில் பழவேற்காடு பகுதியை சேர்ந்த சஞ்சய், 22, என்பவரும் இந்த கொலை வழக்கில் தொடர்புடையது தெரிந்தது. அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி