போக்குவரத்து போலீசாரை தாக்கிய மாங்காடு நபர் கைது
அசோக் நகர்: அசோக் நகரில், தடை செய்யப்பட்ட இடத்தில் காரை திருப்ப முயன்றதை தடுத்த போக்குவரத்து போலீசாரை, தாக்கிய மாங்காடு நபர் கைது செய்யப்பட்டார்.
அசோக் நகர், 100 அடி சாலை – வடபழனி இணைப்பு சாலை சந்திப்பில், போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கண்ணன் மற்றும் ஏட்டு புவனேஷ்வரன், 36, ஆகியோர், நேற்று (அக்.,30) மாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட இடத்தில் ஒருவர் காரை திருப்ப முயன்றார். அங்கு பணியில் இருந்த ஏட்டு, சிறிது துாரம் சென்று காரை திருப்புமாறு அறிவுறுத்தினார். இதை ஏற்காத ஓட்டுநர், அதே இடத்தில் காரை திருப்ப முயன்றதால் இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, காரை ஏட்டு புவனேஷ்வரன் மொபைல் போனில் படம் எடுத்தார்.
ஆத்திரமடைந்த ஓட்டுநர், காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து, ஏட்டு புவனேஷ்வரன் மற்றும் தடுக்க வந்த எஸ்.எஸ்.ஐ., கண்ணனையும் தாக்கினார்.
இது குறித்து விசாரித்த அசோக் நகர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாங்காடைச் சேர்ந்த பிரகாஷ், 39, என்பவரை கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர்.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026