ஆன்லைன் லாட்டரி விற்பனை 3 பேர் கைது
விழுப்புரம்: வளவனுார் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார், இன்று (அக்.,31) காலை வளவனுார் அருகே பக்கமேடு சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு கும்பலாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த முருகன் மகன் சரத்குமார், 28; வி.மருதுாரை சேர்ந்த ஏழுமலை மகன் சந்தோஷ், 25; கே.கே.ரோடை சேர்ந்த கண்ணன் மகன் வைரம், 30; ஆகியோரை வளவனுார் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 10,315 பணத்தையும், 2 மொபைல் போன், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!